கவிதை---செண்பக ஜெகதீசன்

Shenbaga Jagatheesan


11 மே ·

..
'வல்லமை' இணைய இதழில் வெளிவந்த கவிதை..
குறளின் கதிர்களாய்...(167)

சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.
-திருக்குறள் -307(வெகுளாமை)

கவிதைக் கடல்முன்னே,
கடற்கரையில்
சிப்பி பொறுக்கும் சிறுவன்...!

புதுக் கவிதையில்...

கோபத்தைத் தன்
ஆற்றலென
வைத்துக்கொண்டவனின் அழிவு,
நிலத்தில் அறைந்தவன் கை
நோவுக்குத் தப்பாதது போன்றதே...!

குறும்பாவில்...

குணமெனக் கோபத்தைக் கொண்டவனழிவு,
நிலத்திலடித்தவன் கைபடும் துன்பம்போல்
நிச்சயமானதே...!


Close (X)

0 (0)
  

மேலே