தேவதை உன் வரவிற்காக

தினம் தினம் கதைகள் நூறு பேசி
கவிதைகள் பல ரசித்து
என்னை பரவச படித்தினாய்
நான் ரசித்த பாடல்களை நீயும் ரசித்தாய்
கணகலங்கிய நேரத்தில் தோள் சாய்த்து தேற்றினாய்
தனித்திருந்த தருணங்களில் தனிமை நீக்கி தாலாட்டினாய்
பாசத்தில் தாயாகினாய்
உன்னோடிருந்த அந்த ஒவ்வொரு நொடியும் தினம் நினைத்து
அதே காதலுடன் காதிருக்கிறேன் என் இதய வாசல் திறந்து வைத்து தேவதை அவள் வரவிற்காக