வருவாள்!
அம்மா உயிர் அடங்கி
அழுகை குரல்கள்
ஆக்கிரமித்தது வீட்டை!
வீட்டுக்கு வருவோரை
வீதி வந்து வரவேற்பாயே... இன்று வீதியெல்லாம் சொந்தமம்மா-வரவேற்க
நீ இல்லையம்மா!
கால்கடுக்க நின்றால் பொறுக்காமல்
உன் இருக்கை கொடுப்பாயே....
இன்று நீ மட்டும் உறங்கலாயிட்டே!
உம்மனசு பூவென்று காட்டத்தான்
உம்மேல இத்தன பூக்களும்
சாட்சி சொல்ற காட்சியா?
தெய்வமே...
எம்புள்ளைய நல்லா
வாழவைனு கோவில்ல வேண்டுனா போதாதென்று
நேரிலே போய்விட்டாயா!
உன் மொழி கேட்ட காதுகளும்...
உனை பார்த்த
கண்களும்...
காத்திருக்கிறது
நீ வருவாய் (பிறப்பாய் )
என்மகளாக என்று!
♥குரும்பூர் சந்திரபாலா