தாய்மை

பிறப்பால் உயிர் உதிப்பால்
வரும் வதம் பொறுப்பாள்
சிசு முகம் பார்த்து
வலி மறப்பாள்

உயிர்ப்பால் தந்து வளர்பாள்
கண்மணி போல் நித்தம் காப்பாள்

அன்பால் பண்பால் தன்பால்
இழுப்பாள் அந்த பெண்பால்

உணவை மறப்பாள்
உறக்கம் துறப்பாள்
உனையே உயிராய்
வளர்ப்பாள்

முகம் பார்த்து அகம் புரிவாள்
தலை நிமிர வழி செய்வாள்

பண்பால் உயர்ந்தால்
போதும் என்பாள்
தனக்கென ஒன்றும்
என்றும் வேண்டாள்

ஏக இறையின் கொடையானவள்
அன்பில் அவளே முதலானவள்....

எழுதியவர் : இப்னு சுலைமான் (21-May-17, 5:32 am)
சேர்த்தது : இப்னு சுலைமான்
Tanglish : thaimai
பார்வை : 179

மேலே