கடற்கரைக் காதல்
கடற்கரையிலே
காதலென்று சொல்லிக்கொண்டு..
காமக்களியாட்டம் போட்டுவிட்டு...
காதல் கசந்துவிட்டதென்று சொல்லி..
காதலித்த காதலியை..
கன நொடியில் கழற்றிவிடும் காதலனுக்கு
கணக்கில்லா காதலிகள்...
காதலில் காமம் இருக்கலாம்
திருமணத்திற்கு பின்...
காமத்தில் காதல் இருக்கலாகாது
திருமணத்திற்கு முன்...
காமத்தில் ஊற்றிருப்பவனுக்கு
காதலிகள் ஊற்றாக பெருகுகிறார்கள்
கல்யாணத்திற்கு முன்...
காமமில்லாமல் கண்ணியத்தோடு
காதலில் உண்மையாய் இருப்பவனுக்கு
காதலியும் கனவாக போய்விடுகிறாள்...
கலிகாலக் காதல்...?
எனக்கு விளங்கவில்லை
கடற்கரைக் காதலர்களின்
காதல் காம விளையாட்டு...
*******************
சிகுவார
ஆகஸ்து 2001

