தமிழே தயை புரிவாய்

நேற்று இரவு வீட்டுப் பாடம் படிக்குகையில் பேத்தி(இரண்டாம் வகுப்பு): "எனக்கு பிடிக்காத சப்ஜக்ட் தமிழ்.... ஏன் தான் இதைப் படிக்கச் சொல்கிறார்களோ..?"

என்னால் அவள் உணர்வைப் புரிந்து கொள்ள முடிகிறது... ஏனெனில் நானும் தமிழால் மிகக் கடுமையாக நோகடிக்கப் பட்டவன்.... ஐந்தாம் வகுப்புவரை வேறு மொழியில் படித்தபின் ஆறாம் வகுப்பிலிருந்து தமிழ் படிக்க வேண்டிய நிர்பந்ததில் படித்தவன்.... கடைகால் மிக மோசமான நிலையில் கட்டிய கட்டிடம் அதே நிலை... கடந்த இரண்டு வருடமாக தீவிரமாகத் தமிழில் எழுதுவதால் .... தமிழ் கொஞ்சம் பரவாயில்லை... என் தவறுகள் எனக்குத் தெரிகிறது... இன்னும் 'ர' வும் 'ற' வும் என் கைக்குள் அடங்கவில்லை என்றால் அது மிகையாகாது...
ஆதலால் தமிழை எளிமைப் படுத்துவது என்பது என்று முடிவு செய்து விட்டேன்... என்னைப் போன்றவர்களின் தமிழில் தவறு கண்டுபிடிக்காத வண்ணம், என் பேத்தி போன்றோர்க்கு எளிதாகவும் இருக்கவே இம் முயற்சி..
முதலில், முதல் 12 உயிர் எழுத்துக்களில் 11-ஐ அப்படியே வைத்துக் கொள்வோம்..

அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ 'ஒள' வேண்டாம் ... தேவையெனில் 'அவ்'

உயிர் மெய் எழுத்துகளில்
க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ ழ ள ற ன

இதில் ஒரே ஒலியோ அதைச் சார்ந்தோ இருக்கும் எழுத்துக்களில் கூடுதலானவற்றைக் களைவோம். (ஒலி பேதங்கள் மரபு வழியில் இருக்கட்டும், எழுத்தில் வேண்டாம்)

ஆதலின் ண, ந, ன மூன்றிற்கு பதில் இனி 'ந' மட்டுமே..

ல, ள, ழ பதில் 'ல' மட்டுமே... ஐய்யய்யோ... 'ழ' இல்லாமல் தமிழா? அதலால் 'ழ' விற்கு சிறப்பு விலக்கு..

ஒற்று எழுத்துக்கள் தேவையான இடத்தில் பயன் படுத்தலாம்...

இப்பொழுது மொத்த எழுத்துக்கள்

உயிர் = 11
உயிர்மெய் = 15
ஒற்றெழுத்து தேவைப் படும் இடத்தில்...

இதில் கொஞ்சம் பழகி இன்னும் குறைக்க முடிந்தால் குறைக்கலாம்...
இப்பொழுது இந்த 26 எழுத்துக்களை வைத்துக் கொண்டு முதல் பத்தியை மீண்டும் எழுதிப் பார்க்கிறேன்...
-------------பழகிய தமிழில் ----------
தமிழே தயை புரிவாய்....
நேற்று இரவு வீட்டுப் பாடம் படிக்குகையில் பேத்தி(இரண்டாம் வகுப்பு): "எனக்கு பிடிக்காத சப்ஜக்ட் தமிழ்.... ஏன் தான் இதைப் படிக்கச் சொல்கிறார்களோ..?"


-------------- எளிமையாக்கப்பட்ட தமிழில் கீழே ------

தம்இழ்ஏ தயஐ ப்உர்இவஆய்
ந்ஏட்ர்உ இரவ்உ வ்ஈட்ட்உப் பஆடம் பட்இக்க்உக்ஐஇல் ப்ஏத்த்இ (இரந்டஆம் வக்உப்ப்உ) "எநக்க்உ ப்இட்இக்க்ஆத ஸ்ப்ஜக்ட் தம்இழ்.... ஏந் த்ஆந் இதஐப் பட்இக்க ச்ஒல்க்இரஆர்கல்ஓ...?"
----------------------
ர், ற், பற்றிக் கவலைப் பட வேண்டாம், ல, ள பற்றிக் கவலைப் படவேண்டாம், ந, ன, ண பற்றி கவலைப் படவேண்டாம்...
கொஞ்ச நாளில் சந்திகளும் வேண்டாம் என ஆக்கிவிடலாம்...
ய வையும் தவிர்த்து 'இ, ஈ' போதும் என வைத்துக் கொள்ளலாம்...
238 எழுத்துக்களில் இருந்து தேடிப் போடும் தொல்லை இல்லை...
------ முரளி

எழுதியவர் : முரளி (25-May-17, 9:34 am)
பார்வை : 385

மேலே