உன்னோடு ஒரு நாள்
உனக்காக
காத்திருந்த பொழுதுகள்,
உன் கைகள் கோர்த்து
கழிக்கணும்...
உனக்காக
சேர்த்து வைத்த வார்த்தைகள்,
உன் செவியோரம்
சேர்க்கணும்...
உனக்காக
உறங்காத விழிகள்,
உன் மடிமீது
துயிலனும்...
உன்னோடு என்
வாழ்க்கை தொடங்கணும்..
உன் முகம் கண்டு
என் நாள் இயங்கணும்..
உன்னாலே
என் உலகம் சுழலனும்...
உன்னோடு
ஒரு நாள் வாழனும்..