வானில் பெருகிவந்ததடி வைகைநதி

வந்தான்
பார்த்தான்
பட்டாடை உடுத்தி பாதம் பணியவில்லை
பலகார உபசாரங்கள் இல்லை
என்னை பாடச சொல்லவில்லை
பார்த்தான் சிரித்தான்; நானும் பார்த்தேன்
வருகிறேன் என்று சொல்லி சென்றவன்
வரவில்லை
வழியில் விழி வைத்து பார்த்திருந்தேன்
இன்று மாலையில் வாசலில் வந்து விழுந்தது
மஞ்சள் ஓர கடிதம்--அது
நெஞ்சில் தூவிய மலர்கள்
ஆயிரம் ஆயிரம்
தோழி !
வானில் பெருகி வந்ததடி இன்று வைகைநதி .

---கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (17-Jul-11, 5:51 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 308

மேலே