காதலை வென்ற நட்பு!
என் அருமை கல்லூரி தோழியே!
நம் கல்லூரியின் இறுதி நாள் முடிந்ததும்
உன்னைப் பற்றி சிந்திக்கக் கூட
எனக்கு நேரம் கிடைக்கவில்லை,இருந்தும்:
என்றாவது ஒரு நாள்!
உன்னைப் பற்றி சிந்திப்பேன்!
அந்த சிந்தனையின் மூலம்
உந்தன் நட்பின் மீது---எனக்கு
“காதல் வந்து விடும்!”
என்கிற பயம் மனதில் தோன்றலாம்.
அன்று நம் நட்பு! அந்த
“காதலையும் வென்று விடும்!”
என்ற நம்பிக்கை எனக்குள் இருக்கிறது.
அன்று அவ்வாறு நடந்தால்
"காதலை வென்ற நட்பு!"
என்று உலகம் அறியும்!
"நட்பு மேலோங்கி நிற்கும்!"
.
கவிஞன்
ச. நாக சங்கர கிருஷ்ணண்