புகையிலை ஒழிப்பு

செவ்விதழ் சிரிக்கும் குழந்தையை விட
உன்னிதழ் அதிகம் முத்தமிட்டது என்னை தான்...
அன்பு குடும்பத்தின் தேவையை விட நீ
ஆசையாய் அதிகம் செலவிட்டது எனக்கு தான்...

கொஞ்சும் நண்பனாய் நீயிருக்கிறாய், ஆனால்
நஞ்சு பகைவனாய் நானிருக்கிறேன்...

இனியாவது உணர்ந்துகொள்..!!
எனை பிடித்து நீ மகிழும் காலங்கள் எதிர்கால துன்பத்திற்கான ஏற்பாடுகள்..
எனை பிடிக்க நீ ஒதுக்கும் நேரங்கள் மருத்துவ காத்திருப்புகான முதலீடுகள்...
எனை தேடி நீ அலையும் தருணங்கள் மரணத்தைக்
காண்பதற்கான உள்ளீடுகள்...

எனை விரல் பிடித்து தீயிட்டு புகை புசிக்கும் தோழர்களே இனியாவது உணருங்கள்...
நான் என்னை புகைப்பவரின் உயிர் குடிப்பேன்
உடன் இருப்பவரின் உடல் கெடுப்பேன்...

இப்படிக்கு,
எனை பிரிய முடியாமல் தவிக்கும்
உனை பிரிய ஏங்கும் புகை பழக்கம்

எழுதியவர் : லோகேஷ் நாகராஜன் (31-May-17, 8:57 am)
சேர்த்தது : லோகேஷ் நாகராஜன்
Tanglish : pukaiilai ozhippu
பார்வை : 377

மேலே