கவிக்கோ - எங்கள் கவிப்பூ
கவிக்கோ ! - நீ எங்கள்
கவிப்பூ ! - நீ
காகித பூ அல்ல
உலரவோ ...
உதிரவோ ...
எங்கள்
தாய்மண்ணில்
சருகாய் விழுந்து
தமிழுக்குள்
வேறாய் எழுவாய் !!
தமிழ்இதயம் கனக்கும் -
இருந்தும்
இந்த தமிழ் உலகம்
உமக்கு மோட்சம் கொடுக்கும் ...
தமிழால் வாழ்ந்தாய் - இனி நீ
தமிழாய் வாழ்வாய் !!!