அத்தனையும் அவளாய் இருக்கிறாள்
ரதி போல் இருக்கிறாள் -என்
மதி மயக்குகிறாள் !
நதி போல் நடக்கிறாள் -எனக்கும்
நாணம் வரவழைக்கிறாள் !
பனி போல் குளிர்கிறாள் -எனக்குள்
பாசத்தை விதைக்கிறாள் !
சிலைபோல் இருக்கிறாள் -அவள்
பார்வையில் என்னை உளி போல்
செதுக்குகிறாள் !
சிந்தையெல்லாம் அவள் மட்டுமே நிறைகிறாள் -என்னை
நித்தம் கவிதை எழுத தூண்டுகிறாள் !
காதலில் எனக்குள் நிறைகிறாள் -என்
கவிதை யாவும் அவளே எழுத்துக்களாய் நிறைகிறாள் !
கயல் விழி பார்வையால் என்னை வதைக்கிறாள் -அதனில்
கவிதைக்கு சொற்களை எளிதாய் தருகிறாள் !
கனி இதழால் முத்தம் தருகிறாள் -
காணக்கிடைக்காத சொர்கமாய்
அவள் மட்டுமே அவள் மட்டுமே
எனக்கு அத்தனையுமாய் இருக்கிறாள்