முற்றுப்பெறா முதல் காதல்

என் காதல் வார்த்தையாய்
அவள் செவியில் விழும் முன்
கண்களின் ஓரம் அவள் சிந்திய ஈரம்
வாடிய முல்லைப் போல் நின்றாள்.....
புரியவில்லை பதில் ஏதும் கேட்காமல்
பாதியில் வந்துவிட்டேன் வீடு தேடி
மரணத்தின் வலி
மறைத்தேன்.....
சோகங்களின் நாட்டியம் சூழ
அவளைப் பார்க்க மனமில்லை.....
அவள் மனம் புரிந்ததால்
விலகிவிட்டேன் விட்டுவிட்டேன்...
அவளிடம் விட்டு வந்த
என் பாதி காதலுடன்.....

-மூ.முத்துச்செல்வி

எழுதியவர் : மூ.முத்துச்செல்வி (9-Jun-17, 12:35 pm)
பார்வை : 162

சிறந்த கவிதைகள்

மேலே