எழுதுகின்றேன் முதல் பாடல்

தனியாக போகின்றேன் …துணையாக வா வா பெண்ணே…


நீ பேசுவதை மட்டுமே கேட்க துடிக்கிறது
என் மனம்….

உன் உதடுகள் பேசுவது "பொய்" என்று
தெரிந்தும் கூட...
தனியாக போகின்றேன்
துணையாக வா வா பெண்ணே……

விரல் கோர்த்து தோல் சாய
சிறு கோப சண்டை போட.....
துணையாக வா வா பெண்ணே......
துணையாக வா வா பெண்ணே......


சில நிமிடங்கள் கடனாய் கொடு
உன் மாடி மீது தலை சாய்ந்திட.....

நிஜமாக வேண்டாம் பெண்ணே
காற்றாக தலை கோதிடு...........


யாரோடும் பேசாமல்
தனிமையில் காத்திருக்கிறேன் ......

சில நிமிடம் போதும் பெண்ணே - எந்தன்
தோழியாக நீ வாழ்ந்திடு.....

உன் பாத சுவடுகளே
நான் போகும் "திசை காட்டி"

எனைக்காட்டி சொல்லடி பெண்ணே - நானும்
கள்வன் இல்லை, உன் காதலன் என்று......

தனியாக போகின்றேன்
துணையாக வா வா பெண்ணே……

கால் இடறி விழுகின்றேன்
காயத்தில் வழிகள் இல்லை.....

சிறு கணம் கூட அழகாய் இல்லை
நீயின்றி நினைவே இல்லை.....


என் நெஞ்சின் அறை முழுதும்
உன் பிம்ப சுவரொட்டிகள்

யார் என்ன சொல்வது அன்பே
என்னவளே கிழித்தெறிய.....
தனியாக போகின்றேன்
துணையாக வா வா பெண்ணே……

மடி மீது நீ தூங்கிடு
சந்தேகம் கொள்ளாமல்....
உன் தந்தை போலவே
இமைக்காமல் காப்பேனடி.....

விறல் பிடித்து நடை பழகும்
சிறு பிள்ளை போலவே
உன்னோடு வருகின்றேன்
என் தாயும் நீயல்லவா.....

பெண்ணே.......பெண்ணே..... ஓ....பெண்ணே....பெண்ணே
தனியாக போகின்றேன்
துணையாக வா வா பெண்ணே……

எழுதியவர் : திரு சா (12-Jun-17, 8:13 am)
சேர்த்தது : சாதிரு
பார்வை : 108

மேலே