காதலின் அவஸ்த்தை

"காதலில்
சிக்கிக் கொள்ளாமல்
இருப்பது எப்படி"?

கவுன்சிலிங்
குடுக்குறாங்கனு
கேள்விப்பட்டு
ஓடிப்பார்த்தால்
அவ்ளோ பெரிய
க்ய்ய்ய்யூ...

கடவுள்
சிம்மாசனத்தில்
அமர்ந்திருந்தார்

அடிச்சு புடிச்சு
முண்டியடிச்சு
முன்னாடிப்
போயிடலாமென
முயன்றும்
பலனில்லை..

ஆண்டவன்
அடிக்கடி
என்னையே
நோட்டமிடுவதைத்
பார்த்தவர்களுக்கு
என்ன புரிந்ததோ
தெரியவில்லை

தம்பி நீங்க
வரிசைல
நிக்க வேணாம்
நேரா போயிப்
பாருங்க - அவர்
பார்வை
உங்க மேலதான்

சொல்லி
முடிக்கவில்லை
மூச்சிரைக்க
"முன்னவனின்"
முன் நிற்கிறேன்..

திருமான்
திருவாய்
மலர்ந்து
சொன்னான்
கால் வலிக்குதேனு
களைப்பாற
வந்தமர்ந்தேன்
ஒருவேளை
உறங்கி விட்டால்
உசுப்பி விடு
உனக்கு
முன்னாடி
நான் தான்..

எழுதியவர் : சுரேஷ் சிதம்பரம் (12-Jun-17, 9:32 am)
Tanglish : kathalin avasththai
பார்வை : 182

மேலே