எங்கே என் காதல்

ஜனனம் மரணம் மறந்து
துழாவிய கைகள் எங்கே?
துலாபாரம் தோற்றிடும் காதல்
தூறலாய் போனது எங்கே?
நனி நல்கிய காதல்
பிணி நல்கி சாய்ந்தது எங்கே?
மது உண்ட மதுகரம்
மாண்டு போனது எங்கே?
மாசற்ற என்னவள்
நானிலம் விட்டு போனது எங்கே?
குறிஞ்சி வாசம் ஊறிய நாசி
செயல் இழந்து போனது எங்கே?
தும்பியாய் திரிந்த இன்பம்
வேட்டை போனது எங்கே?
இளநரை இலவம்
காற்றில் கலந்தது எங்கே?
இளஞ்சிவப்பு காந்தளும்
இமயம் சேர்ந்தது எங்கே?
முற்றும் மறந்த முனிவனாய் - நான்
திரிவது எங்கே? எங்கே?

-மூ.முத்துச்செல்வி

எழுதியவர் : மூ.முத்துச்செல்வி (12-Jun-17, 12:31 pm)
சேர்த்தது : மூமுத்துச்செல்வி
Tanglish : engae en kaadhal
பார்வை : 221

மேலே