மாண்டாலும் உயிர்த்தெழுவேன்
மாண்டாலும் உயிர்த்தெழுவேன்.....
அன்பை மட்டுமே ரொக்கமாய் கொடுத்து
ஆயுள் முழுதும் உனை பத்திரமாக்க
அடிமை சாசனத்தில் கையப்பமிட்டேன்..
அன்பே அதை இழந்திடுவேனோ
அச்சம் என்னில் தொற்றிக் கொளவதேன்
ஆழ் மனதில் இலவச இணைப்பாய்....
உன் உள்ளத்தில் மையம் கொண்ட மௌனப் புயலால்
ஆர்ப்பரிக்கும் சமுத்திரத்தின் அலைகரங்கள் முடங்கி ஊனமாய்...
எச்சரிக்கை எண் உச்சம் ஏற பயணம் தொடராது...
வெறிச்சோடிடும் கடற்கரையில் கட்டுமரமாய் நான்.....
பற்றி எரியும் கானகத்திடையே
சிக்குண்டு பொசுங்கும் குஞ்சுகள் கண்டு
கதறிடும் தாய்ப் பறவையாய் என் மனம்....
ஊற்றுகள் வறண்ட ஆற்றுப் படுகையில்
வெடித்துப் பிளந்த மணல் திட்டுகளிடையே...
எட்டிப் பார்க்கும் புல்பூண்டுகளாய் இதயம்...
சுவாசம் பகைத்து மாண்டாலும்
நியாயம் தீர்க்கும் நாளில்
கல்லறைகளைப் புரட்டி மீண்டும் உயிர்தெழுவேன்...
உலர்ந்து சிதறிய என் அர்ச்சனை பூக்களை
அடையாளமாக்கி ....
கவிதாயினி அமுதா பொற்கொடி