ஒற்றுமை
காய வைத்த தானியங்களை கொத்தி தின்றன
புறா கூட்டம்
நான் வரும் அசைவை உணர்ந்தவுடன் சட்டென பறந்தன அத்தனையும்
அற்புத அழகை ரசித்து முடிக்கையில் வரிசையாய் அமர்ந்திருந்தன மின்கம்பியில்
அடடா எத்தனை அழகு!
மீண்டும் ஒருமுறை பார்க்கும் ஆசையில் மறைந்து நின்றேன் ஓர் ஓரமாய்
நான் இல்லை என்பதை எண்ணிய மறுகனம் மீண்டும் வந்து தின்றன ஒன்றாய்
என் காலடிச் சத்தம் அதன் செவிகளில் பட்டதனலோ என்னவோ இமை பொழுதில் பறந்து சென்றது மின்கம்பியை நோக்கி
சில மணித்துளிகள் இதே தொடர...
வியந்தேன்
ஒற்றுமையில் இவ்வளவு அழகா!
நினைவில் வந்தது
குலாய்யடிச் சண்டையும்
கருவறை தரிசனமும்
தேவைகள் என்பது அனைவருக்கும் தானே
கற்றுக்கொள்ள வேண்டம் இவைகளிடமிருந்து
புறாக்களுக்குத் தெரிந்தது
புன்னகைக்கத் தெரிந்த மக்களுக்கு புரியவில்லையே!