சிந்தை செய்வீர்
🤔சிந்தை செய்வீர் 🤔
✍🏼மருதுபாண்டியன்.க
இன்று பிறந்து நாளை இறந்து -அதன்
மறுநாள் புதைந்து
புழுக்கள்உண்ண வெற்றுமனித
மாமிச பிண்டமென நினைத்தாயோ?
செங்குருதி புகழ்ந்து - தனை
நீந்தி விரைந்து நம் சிந்தைவென்றிடும் எண்ணக்
குவியலை பாராயோ?
காலங்கள் தோற்பினும்
மெல்ல காலனை மரித்து
பாரினை வெல்லும் சரித்திர சிந்தைக் கொள்வேமே??
நல்லதோர்
சிந்தை செய்வீர்!!சிந்தை செய்வீர்!!
கரு : காலத்தையும் வெல்லும் வல்லமை நம் எண்ணங்களுக்கு உண்டு 👍