கருணையை மறந்த ஆணவம் கொண்ட மனிதர்கள்

" எங்கோ ஒரு சிங்கம் ஊருக்குள் புகுந்து மனிதர்களை வேட்டையாடிவிட்டது. ", என்ற சேதி கேட்டால் மட்டும் உள்ளம் பதைபதைக்கிறது இந்த மனிதனுக்கு...

உண்மையில் இந்த மனிதர்கள் பயம் கலந்த பேராசையுடன் வியாபார எண்ணமே நிறைந்து காணப்படுகிறார்கள் இந்த பரந்த உலகில்...

ஒருவேளை பரிணாம வளர்ச்சியில் விலங்கினங்களின், பறவையினங்களின் ஆறாம் அறிவு விழிக்கப்பட்டு, மனிதர்களைப் போல் பேசும் ஆற்றல் கிடைக்கப் பெற்றால் இம்மனிதர்களின் நிலைமை தலைகீழாகவும் மாறிவிடும்...
மனித இறைச்சி சந்தையிலேயே கிடைக்கும்...

கருணையை மனிதர்களென்றோ, விலங்குகளென்றோ, பறவைகளென்றோ பாகுபாட்டோடு காட்டுவது மிகப்பெரிய அறியாமையாகும்.
இன்னும் சிலர் இதில் மிகவும் முன்னேறி ஆண், பெண், என்ற வித்தியாஷங்களைப் பார்த்தும் கருணை கொள்கிறார்கள்...
சாதி, மத, இன, மொழி, நாடு போன்றவை அடிப்படையில் கூட கருணை கொள்கிறார்கள்...
இவை தவறான புரிதலையே மனிதர்களுக்கு வழங்குகின்றன...

இந்த உலகில் எப்போதும் மனிதர்களே ஆதிக்கம் செலுத்துவார்களென்ற எண்ணத்தால் மனிதர்களின் அகந்தை குணம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே செய்கிறது, வண்டியின் பாரத்தை விட அதிக எடையை ஏற்றிக் கொண்டே செல்வதை போல.....

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (20-Jun-17, 8:52 am)
பார்வை : 1274

மேலே