எழுதாத வரிகள்
எல்லாம் எழுதிவிட்டேன்
அவளை பற்றி
விழி தொட்டு
பாத விரல் வரை
ஏன்
அவள் தோழியையும்
செல்ல நாய்க்குட்டியையும் பற்றி கூட
எழுதிவிட்டேன்
ஒன்றை மட்டும் நான் இன்னும் எழுதவில்லை
அவள் இதயத்தை பற்றி
அது எனக்குத் தானா ?
தெரியாமல்
எப்படி எழுதுவேன் ?
----கவின் சாரலன்