அன்பே மடியில் மடியவா
இதுவரை இப்படி இருந்ததில்லை.
என்னை நானே மறந்ததில்லை.
உனைக்கண்டநாள் முதல் மாறிவிட்டேன்.
எனைத்தரஉனக்கு தூது விட்டேன்.
காதல் வலியது பொய்யடா அது
கடவுளை தாண்டிய மெய்யடா.
மறக்கும் உன் இதயத்தில் இரக்கம் இல்லை.பல
இரவினை கடந்தும் உறக்கம்
இல்லை.
உயிர் வாழ காதலை நீதந்து,
மௌனம் காப்பது ஏன் இன்று?
உயிரே உயிரில் கலக்க வா..இல்லை
உயிர்விட்டு நான் மெல்ல இறக்கவா?