இழந்தேன் இத்தனையும்
கவிதை எழுத முயற்சி செய்தேன்
மூன்று நாட்களாக,
எழுதி முடித்தேன்
உன் பெயரை மட்டும் முதல் வரியில்.
உன் கூந்தல் கார் மேக கூட்டம்
உன் இதழ்கள் கூட தேன் சொட்டும்
உன் சிரிப்பு என்றும் கரும்பு தோட்டம்
உன் கோபம் மட்டும் மிளகாய் தோட்டம்!
ஜில்லுனு வீசும் தென்றலை விட
சிலிர்க்க வைக்கும் உன் சிரிப்பு
பசுமை தரும் கொடியை விட
பாசம் தரும் உன் பேச்சு
சொல்லி முடிக்க ஆயிரம் விஷயங்கள்
கேட்க மட்டும் நீ இல்லை
இழந்தேன் இத்தனையும்
அப்படியே உன் ஹாய்