பார்வை கொலை

எப்போது பார்த்தாலும் ஏதோ ஒரு வித வலி
இதயம் இதமாய் அழுந்திக்கொண்டது போல,,,,,,

இல்லை இல்லை அது வலி இல்லை சுகம் தான்
என்ன உணர்வு என்றே சொல்லத்தெரியவில்லை----இன்னமும் தான்

எப்போது பார்த்தும் கசந்துவிடாத பார்வை
கசந்தாலும் சுவை தான் உன்னால் -- உன்னோடு மட்டும்

காணவேது நிஜமேது என்று ஒரு நிமிடம்
தான் நினைக்க வைத்துவிடும்

கனவென்றால் கணநேரம் பிரிந்து
விடாமல் பார்த்து இருப்பேன்

நிஜம் என்றால் நிச்சயமாய் திரும்பிவிடுவேன்
கொஞ்சமாவது என்னை நான் காத்துக்கொள்ள .............

எழுதியவர் : வான்மதி கோபால் (25-Jun-17, 9:29 am)
சேர்த்தது : வான்மதி கோபால்
Tanglish : parvai kolai
பார்வை : 92

மேலே