வேண்டாம் இந்த மது -குடி குடியைக் கெடுக்கும்

மாளிகையில்
தங்கக் கோப்பையில்
மது அருந்தினாலும் சரி
டாஸ்மாக் கடையில்
குவாட்டர் வாங்கி
அங்கு வாசலிலேயே
ரா வாய் குடித்தாலும் சரி
ஏழை எனக்கு இதே
போதும் என்று
பனங் கீத்து குடிசையில்
மண் கிண்ணத்தில்
கள் ஊற்றி ஊற்றி
குடித்தாலும் சரி
குடி பொருள் தன
ரசாயன இயல்பில்
ஒன்றே தான் -அது
என்றும் புத்தியை
பேதலிக்க செய்யும்
போதை பொருள்தான்
விடம் தான் -பழக்கம்,
குடி பழக்கம் முற்றிவிட்டால்
குடி உயிர் கொல்லியாய்
மாறிவிடும் கொள்ளிவாய்ப்பேய் போல்
அதற்கு தெரியாது
இவன் அரசன்,இவன் தொழிலாளி
இவன் உழவன் இவன் மாணவன்
என்று எல்லாம் -நச்சு பாம்பின்
விடம் யாரைக் கொட்டினாலும்
விடம் விடம் தான்
உயிரை மாய்க்கும் -அது போல
குடி உன்னைக் கெடுப்பதோடு
உன் குடியை கெடுக்கும்
அதனால் மகனே நீ
ஒரு போதும் குடி மகன்
ஆகிவிடாதே -நல்ல
குடிமகனாய் வீட்டிற்கும் நாட்டிற்கும்
நலம் தரும் செல்வா மகனாய்
இருந்திட்டு, சிறந்திடு
குடியை உன் சுற்று சூழலை இருந்து
வேரோடு பிடுங்கி எரிந்து விடு
வீட்டில் பெண்டிரும் பிள்ளைகளும்
பெரும் தொல்லைகளில் இருந்து
விடுபட்டு அமைதியில் வாழ்ந்திட
ஒழிப்போம் வாருங்கள்
மதுவை, மதுக் கடைகளை
சீர்திருத்தவோம் குடி போதைக்கு
அடிமை ஆகியோரை
தமிழ் அன்னையே எமக்கு
வெற்றி தந்திடுவாய்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (27-Jun-17, 1:54 pm)
பார்வை : 211

மேலே