நதியின் சங்கீதம் -- ஒரு விகற்ப பஃறொடை வெண்பா -- மரபு கவிதை

நதியின் சங்கீதம் -- ஒரு விகற்ப பஃறொடை வெண்பா -- மரபு கவிதை


நதிதரும் சங்கீதம் நாதமாய்க் கேட்க
மதிமயங்கி நின்றேன் மலைச்சாரல் ஓரம் .
விதிதனையும் மாற்றுகின்ற விந்தையாம் ஆறும்
புதிதாய் உருவெடுத்துப் புத்துணர்ச்சி ஆங்கே
அதிகாலை வேளை அழகு .


ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (1-Jul-17, 10:00 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 65

மேலே