வலையாய்

சிலந்திக்குத் தெரியும்,
சிக்கமாட்டோம்
தம்
வலையில் என்று..

வருவது தெரியாமலே
வஞ்சமாய் மனிதன்
வலிமையாய்ப் பின்னிடும் வலை-
வாழ்வைக் கெடுத்திடும் கவலை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (4-Jul-17, 7:12 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 98

மேலே