ஒற்றுமை

இன்றைய மக்களிடம் சகிப்புத்தன்மமை,ஒற்றுமை,சகோதரத்துவம்,நல்லிணக்கம் குறைவதை தடுக்க என்ன செய்ய வேண்டும்
ஒற்றுமை, சகோரத்துவம், சகிப்புத்தன்மை இதை நாம் மக்களிடம் என்ன தான் காட்டு கத்து கத்தி சொன்னாலும் அல்லது எப்படி சொன் னாலும் எந்த மக்களும் அதை உள்வாங்கமாட்டனர் சகிப்புத்தன்மையோடு ஒற்றுமையாய் அன்பாய் இருங்கள் என்று சொன்னால் மக்கள் நம்மை பைத்தியாக்காரனாக இருப்பானோ என்று எள்ளி நகையாடி கூறுவர்
எல்லாம் நவீன மையம் இங்கு யாருக்கும் யாரின் மீதும் அக்கறை இல்லை எல்லோரும் இயந்திர வாழ்க்கையை வாழ்கின்றனர் ஆடி அடங்கி தன் பிள்ளைகளால் கைவிடப்பட்டு முதியோர் இல்லத்திற்க்கு சென்ற பிறகு தான் இன்றைய மனிதன் உணர்கிறான் உண்மை வாழ்க்கை என்றால் என்ன என்று, வயதான மனிதன் தான் அழத்தெரிந்த உயிரினமாக உண்மையாக வாழ்கிறான்,,

அதுவும் அடுக்குமாடிகுடியிருப்பு மற்றும் நகரத்து வாசிகளை சொல்லவே வேண்டாம் பக்கத்து வீட்டில் கொலை கொல்லை கற் ப்பழிப்பு,இழவு,திருமணம் என்ன நடந்தாலும் ஒரு இயந்திரம் போல தனது அன்றாட பணியை செய்ய துவங்கி விடுவான் உணர்ச்சி இல்லாத இயந்திரமாக

நீங்கள் சாலையோரத்தில் நின்று அங்கு நடப்பதையெல்லாம் கொஞ்சம் நேரம் வேடிக்கை பாருங்கள்,அனைவரின் முகத்திலும் ஒரு கோபம் ,வக்ரத்தோடு அவர்கள் ஒவ்வொருவரின் முகமே அரக்கத்தனமாக இருக்கும் யாரின் முகத்திலும் உண்மையான சிரிப்பு இருக்காது ஒரு வெறியோடு வெறி பிடித்தார் போல இருப்பர்,
இப்படி நாம் ஆனதுக்கு காரணம் என்ன என்று ஆராய்ந்தால் இதற்க்கு முதல் கோணல் முற்றிலும் கோணலாக நமது கல்வி முறை தான் காரணம் என்பதனை நாம் அறியலாம் பள்ளி கூடங்கள் நமது மாணவர்களை lkg முதல் நான் சொல்வதைத்தான் நீ செய்ய வேண்டும் நான் சொல்வதைத்தான் நீ கேட்க வேண்டும் நான் சொல்வதைத்தான் நீ பார்க்க வேண்டும் என்று மனிதனை இயந்திரமாய் பள்ளியில் உருமாற்றுகின்றனர்
தப்பித்தவறி பள்ளிபடிக்கும் குழந்தை ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்தால் பிரம்பால் பயங்கரமாக பத்து அடி விழும் அத்தோடு அந்த குழந்தை பொதுநலத்தை விடுகிறது, சக மாணவர்களுடன் பேசினால் அதற்கு பிரம்பால் பத்து அடி அது போக ஒன்றும் அறியாத குழந்தைக்கு அபராதம் வேறு அத்தோடு அந்த குழந்தை சகோரத்துவத்தையும் நல்லினக்கத்தையும் விட்டுவிடுகிறது,இது போன்று இன்னும் இன்னும் , யார் எக்கேடு கெட்டுப்போனால் நமக்கென்ன யாரு ரோட்ல அடிபட்டு கிடந்தா யாராவது யாரையாவது நம்ம கண் முன்னே கொன்னாலும் அத எதுக்கு நமக்குனு ஒரு உணர்ச்சியற்ற ஒற்றுமையற்ற சகோதரத்துவமற்ற சுயநல கோபம் மட்டுமே கொண்ட இயந்திரம், மனிதனின் உருவத்தில் வாழத்துங்குகிறது இந்த கல்வி முறையால்

இன்று காலை ஒரு முகநூல் நண்பர் வருத்த்தோடு ஒரு பதிவை போட்டிருந்தார் அதில் நான் என் அடுக்குமாடி குடியிருப்பில் முரங்கை மரம் வளர்க்க அனபாய் ஆசை ஆசையாய் பூந்தொட்டியில் ஒரு முரங்கை மரத்தை வாங்கி வந்தேன் ஆனால் குடியிருப்பு வாசிகள் யாருமே இந்த முரங்கை மரத்தை அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் நட்டு வளர்க்க என்னிடம் எதிர்ப்பு கூறி சண்டைக்கே வந்து விட்டனர், இந்த முரங்கை மரம் வளர்ந்தால் அதில் வளரும் முரங்கை கீரை ,முரங்கை காய்களை நாம் அனைவரும் பகிரந்து எடுத்துக்கொள்ளலாம் என்று கூறியும் கூட யாரும் இந்த முரங்கை இருக்க கூடாது என்று என்னிடம் தீவிரமாக சண்டையிட்டனர் வருத்தத்தோடும் கோபத்தோடும் நான் அந்த முரங்கை யும் பூந்தோட்டியை போட்டு உடைத்தே விட்டேன் என்று வருத்தத்தோடு பதிவிட்டிருந்தார்
ஒரு மரத்தை வளர்க்கும் அளவிற்க்கு கூட நம் சமுதாயம் ஒற்றுமையாய் இல்லையே




ஒள்றுமை,சகோதரத்துவம்,நல்லிணக்கம்
முதலில் நாம் இதனை குழந்தைகளிடம் தான் எடுத்துச் செல்ல வேண்டும் இன்றைய குழந்தைகள் தான் நாளைய மக்கள் , இப்போதெல்லாம் ஒரு குழந்தை விழித்திருக்கும் நேரத்தில் பெற்றோர்களிடம் இருப்பதை விட ஆசிரியர்களிடம் பள்ளியில் தான் அதிக நேரம் இருக்கின்றனர்,
பள்ளிகளில் எத்தனையோ பாடங்கள் இருக்கின்றது ,ஆனால் வாழ்க்கைப்பாடத்தை கற்றுக்கொடுக்க ஒரு பாடம் கூட இல்லை, என்பது வேதனையான விஷயம்
பள்ளியில் lkg முதல் பணிரென்டாம் வகுப்பு முடிக்கும் வரை குறைந்தபட்சம் ஒருமணிநேரமாவது வாழ்க்கைப்பாடத்திற்க்கு ஒதுக்க வேண்டும் ,வாழ்க்கைப்பாடத்திற்க்கு புத்தகம்,பரீட்சை நிச்சயம் தேவையில்லை,
தகுதி பராமல் ,பிரிவினை பாராமல்,வேறுபாடுகள் பாராமல் பழக அன்போடு கற்றுத்தர வேண்டும்
வாழ்க்கை பாடத்தின் போது குழந்தைகளுக்கும் மாணவர்களுக்கும் வேடிக்கைப்பார்க்க கற்றுக்கொடுக்க வேண்டும்,சக மனிதர்களோடு சகஜமாக எப்படி பழக வேண்டும் என்று கற்றுக்கொடுக்க வேண்டும்,108 ஆம்புளன்ஸ் நாம் வாகனத்தில் பயணிக்கும் போது வந்தால் அதற்க்கு வழி விட வேண்டும் என்பதனை கற்றுக்கொடுக்கவேண்டும், இது போன்ற மனித அன்பினை வளர்க்கும் நல்லதை பொறுமையோடு குழந்தைகளுக்கும் மாணவர்களுக்கும் அன்பாக சொல்லி த்தர வேண்டும், இது எல்லாத்தையும் விட பொறுமையாக ஒழுக்கத்தை கற்றுக்கொடுக்க வேண்டும்,நல்ல தொடுதல் கெட்ட தொடுதலை பற்றியும் நிதானமாக கற்றுத்தர வேண்டும் , மனிதாபிமானத்தை வளர்க்கும் ஒற்றுமையை வளர்க்கும் சகோதர துவத்தை வளர்க்கும் நல்லிணக்கத்தை வளர்க்கும் பிரிவினை பாராது பழக என நல்லதனைத்தையும் பள்ளியில் ஆசிரியர் கற்றுத்தருதல் வேண்டும் இயந்திரமாக இல்லாமல் அன்பு கொண்ட மனிதனாக

இது தான் சகிப்புத்தண்மை,ஒற்றுமை,சகோரதத்துவம்,நல்லிணக்கம், மேலும் நல்ல சமுதாயம் வளர இது தான் ஆகச்சிறந்த மிகச்சிறந்த வழி

எழுதியவர் : க.விக்னேஷ் (4-Jul-17, 7:43 pm)
சேர்த்தது : விக்னேஷ்
Tanglish : otrumai
பார்வை : 30104

மேலே