நாக்குராசு

யாரைப் பாட்டிம்மா 'நாக்குராசு'-ன்னு கூப்படறீங்க?
😊😊😊😊😊
எம் பேரனத்தாண்டா கூப்படறன் நடராசு.
😊😊😊😊😊
பாட்டிம்மா என்ன வட மாநிலத்திக்கு பதவி உயர்வோட மாத்தினாங்க இல்லையா?
😊😊😊😊😊
ஆமா.. அஞ்சு வருசத்து முன்னாடி.
😊😊😊😊😊
நான் அங்க போன ஒரு மாசத்துக்குள்ளயே நடராஜன் -ங்கற எம் பேர நட்ராஜ் -ன்னு மாத்திட்டேன்.
😊😊😊😊
எம் பேரனும் வடக்கே போயி நாகராசன் -ங்கற அவம் பேர நாக்குராசு -ன்னு மாத்திட்டிட்டாண்டா நடராசு.
😊😊😊😊
என்னங்க பாட்டிம்மா எம் பேர
மறுபடியும் நடராசு -ன்னு சொல்லறீங்க. நீங்க நட்ராஜ் -ன்னுதான் எம் பேரச் சொல்லணும்.
உங்க பேரன் பேரு நாகராஜன். அதை அவன் நாக்ராஜ் -ன்னுதான் அவன் பேர மாத்திருப்பான். அதான் நீங்க நாக்குராசு -ன்னு கூப்பிட்ட போதே
நாங் கொஞ்சம் தடுமாறிப் போயிட்டேன். நீங்க யாரையோ நாக்குராசு -ன்னு கிண்டல் பண்ணறீங்கன்னு நெனச்சிட்டேன். எங்க அழகான பேரையெல்லாம் தப்புத் தப்பா உச்சரிக்காதீங்க.
😊😊😊😊
நான் என்னடா பண்ணட்டும் நடராசு.
நீங்க மாத்திட்ட பேரெல்லாம் இந்தப் பாட்டி வாயில நொழையமாட்டங்குதே.
😊😊😊😊😊
???????