பிரிவு
பிரிவு
ஒவ்வொரு விடியலும்,
ஒவ்வொரு யுகமாய் தோன்றுதடி!
நீ இல்ல யுகங்களை யூகிக்க,
என் மனம் வாடுதடி!!
துயில் துடைத்த மறுகனம்,
என் விழிகள் மறு விழிகளை தேடுதடி!
மறுவிழியை துறந்தமையால்,
என் விழிகளில் நீர் கோர்க்குதடி!!
அறை முழுக்க உன் நிழல் படியுதடி!
நிழலில் என் இதழ்பதிக்க,
உன் பிம்பம் மறையுதடி!!
சமையலறையில் உன் சாயல் தோன்றுதடி!
ஓடி வந்து உன் சாயல் தழுவ,
காற்றினிலே என் கரம் நழுவுதடி!!
நம் துவாலை முகர்தனிலே,
உன் வாசம் அடிக்குதடி!
உன் வாசம் சுவாசிக்க,
என் சுவாசம் நின்றதடி!!
கண்ணாடி முன் நான் அலங்கரிக்க,
உன் உருவம் காட்டுதடி!
தலை சாய்த்து தேடுகையில்,
உன் உருவம் மறையுதடி!!
குளிர் காற்றினிலே,
உன் வடிவம் களவியல் பேசுதடி!
நம் களவியலின் இச்சத்தால்,
என் உதிரம் உறையுதடி!!
நம் குடில் மொத்தம்,
உன் நினைவுகள் என்னை கொள்ளுதடி!
உன் நினைவை அசைப்போட,
என் இதயம் கனக்குதடி!!
என் இதயத்தின் நாளங்கள்,
நாட்களை எண்ணுதடி என்னவளே!!
தாமதம் இன்றி இரு உயிரை
ஓர் உயிராய் கலப்பினம் செய்ய,
வந்து விடு என்னவளே, அடி என்னவளே!!!
உன்னவன்
தௌபீக்