நட்பு

மண் நனைந்திட
மழை வந்து வந்து
பெய்திடல் வேண்டும்
ஒரு முறை மழை
பொய்த்தாலும் மண்
வறட்சியால் வாடும்
நண்பனின் நட்பு
மழையில் ஒரு முறை
நனைந்த நண்பனுக்கு
அதன் பின்னே வாழ்க்கையில்
வறட்சி என்பது யாண்டும் இலையே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (17-Jul-17, 5:09 pm)
Tanglish : natpu
பார்வை : 725

மேலே