நண்பன்

மகிழ்வான தருணத்தில்
மனம்போல போக்கில்
கொண்டாடி மகிழ்வதல்ல
உண்மை நட்பு ...

​துயர்மிகு நேரங்களில் ​
வழிந்திடும் விழிநீரை
துடைக்க முற்படுபவரே
உண்மை நண்பன் ...

தவித்திடும்​ தருணத்தில்
கைகொடுத்து உதவிடும்
உள்ளம் படைத்தவரே
உண்மை நண்பன் ...

சரியான சமயத்தில்
சரியாக புரிந்திட்டு
தானாக உதவுபவனே
உண்மை நண்பன் ...

தன்னலம் விரும்பாது
அடுத்தவர் நல்வாழ்விற்கு
தக்கநேரத்தில் உதவுபவனே
உண்மை​ நண்பன் ....

எதிர்பாராத நேரத்தில்
எவ்வழி​யிலும் மனமுவந்து ​​​
எதிரிக்கும் உதவுபவனே
உண்மை மனிதன் ....

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (18-Jul-17, 6:39 am)
Tanglish : nanban
பார்வை : 902
மேலே