யான் எழுதுவது கவிதையுமல்ல
யான் எழுதுவது கவிதையுமல்ல
--யாப்பும் மரபும் அறிந்தவனுமல்ல !
யானறிந்த வரையில் வடிப்பவனே
--யாவரும் வாசிக்க நினைப்பவனே !
யாழிசைக்கு மயங்கும் ரசிகனாய்
--யாண்டும் ரசிக்கிறேன் தமிழகை !
யான் தொழுகின்ற தாய்மொழியை
--யாப்பியமாய் எழுதுகிறேன் கவிதை !
யாத்திடும் புலவனல்ல நானும்
--யாப்புறவும் அறியேன் என்றும் !
யான் வடிக்கும் வரிகளிணைந்து
--யாவரும் படிக்கும் கவிதையாகுது !
------------------------------------------------
யாண்டும் = எப்போதும்
யாப்பியம் = பொழுதுபோக்கு
யாப்புறவு = நியதி / முறை
-------------------------------------------------
பழனி குமார்