அப்துல் கலாம்

அப்துல் கலாம்
இந்தியத் தாயின் முகம்.

இந்தியாவின் முகவரி.

நம் நாட்டின்
வடக்கே இமயமலை
கிழக்கே அப்துல் கலாம்.

நடமாடிய விஞ்ஞானம்

தந்தை தெரஸா

இந்தியாவின் ரியல்
சூப்பர் ஸ்டார்.

இந்தியாவை
தலைநிமிரச் செய்த
இமயத் தமிழன்.

மனித நேயம் மிக்க
மகத்துவ தேசத்தை
மண்ணில் சமைக்க
சுற்றிச் சுழன்ற
மனிதத் தேனி.

அவர்
உள்ளத்தில் முளைத்த
ஏவுகணை
விண்ணைத் துளைத்தது.

நெருப்பை - இளைஞர்களின்
நெஞ்சங்களில் ஏற்றிய
நெம்புகோல்.

வல்லரசு விதை
மண்ணில் விழுந்திருக்கிறது.
விரைவில்
அக்னிச் சிறகு முளைத்து
அகிலம் போற்றும்
வல்லரசு விருட்சம்
வளரும்.
அதற்கு இந்தியனாய்த்
தோள் கொடுப்போம்.


துணை நிற்போம்.
கேப்டன் யாசீன்.

எழுதியவர் : கேப்டன் யாசீன் (27-Jul-17, 6:51 pm)
Tanglish : apthul kalaam
பார்வை : 2464

மேலே