கடவுளின் ஆறுதல்
அன்பும், கருணையும் பொங்கிட மனித மனதின் கதறலாய் தமிழன்னை ஒலிக்கக் கேட்ட இறைவன் வாய் திறந்தான் உள்ளுணர்வாய்..
உங்களால் உணர முடிகிறதா?
அல்லது அந்த உணர்வை எடுத்துச் சொல்லவா?
சொல்கிறேன் அருட்பெருஞ்சோதியின் சாட்சியாய்..
அன்பும், கருணையும் மேலிட
உயிர்களெல்லாம் கூடிவாழ வாரி வழங்கும் வள்ளலாய் இயற்கையைத் தந்தேன்..
இயற்கையால் வளர்ந்து வாழ்ந்த மனிதர்கள் பகைமை கொண்டு அந்த வள்ளலைக் கொள்ளையிட்டு ஏழையாக்கிவிட்டார்கள்...
ஆடம்பரத்தை தங்களுடையதாக்கவே உழைக்கிறார்கள்...
போதுமென்ற மனம் கொஞ்சம் கூட இல்லை...
மலையை உடைத்துக் கற்களைக் கொண்டுவந்து, சிற்ப கலையில் ஆத்ம விசுவாத்தால் நற்சிற்பங்கள் வடிவித்தார்கள்...
அதற்குக் கொவில் கட்டி நான் அங்கே இருப்பதாக ஆடம்பரச் செலவு செய்து வணங்குகிறார்கள்...
அதிலாவது ஒன்றுகூடுகிறார்களே என்று நினைத்து மகிழாதவாறு அதிலும் சாதி, மதம், இனமென்று பாகுபாடுகளை ஊட்டினார்கள்...
அன்பாகிய என்னை விடுத்து எங்கெல்லாமோ சென்றென்னை தேடுகிறார்கள்..
தங்கள் சந்ததியினருக்கு அன்பையும், கருணையையும் போதிக்கத் தவறுகிறார்கள்..
இவ்வாறு பல அறியாமை செயல்களை ஆற்றி, அதற்கான பலனைப் பெற்றுத் துன்புறுகிறார்கள் செம்மறியாடுகளாய்...

