காற்றின் நிழல்
பசி வந்தால் பத்தும்
பறந்து போகும்
போதை வந்தால்...?
நிலையாக
நடக்கமுடியவில்லை
ஆனாலும் பறக்கிற சுகம்
போதையில் அவன்....
போதை ஏறினால்
பேதையும் வீரனாகிறான்
காதலித்தால் வீரனும்
பேதையாகிறான்...
போதை சொர்க்க வாசம்
இராஜபோகம்
நிரந்தர துன்பத்துக்கு
பகுதிநேர இன்பம்..
சில கோப்பைகள் உள்ளே
போனால் சமரசம் சமத்துவம்
தத்துவம் வெளியே வரும்...