கலாம் ஐயா நினைவு நாள்

காலம் ஈராண்டு ஆனதோ..

கலாம் ஐயா காணாம போயி...




கனவு காண சொல்லிட்டு

காணாமல் போனதேன் சாமி..




சதிகார வலைகளிலே

கதி கலங்கி நிக்கிரோமே.




விதி இதுதானு நாங்களும் பொறுத்துப் போயித் தோற்றிட்டோம்...

நாதியட்று கிடந்த நாங்க நாயக உன்னை போற்றிட்டோம்...




அக்னி சிறகுகளிலே ஆதரவு நாங்க கண்டிட்டோம்...

அரிதாரம் பூசிக்கிட்டு அவதாரமா கிளம்பிட்டோம்...




போதிக்க உங்கள் வார்த்தைகளிலிருக்கு..

சாதிக்க கிளம்பிட்டோம்...




சந்தேகம் ஏதும் வேண்டாம் ஐயா வெற்றிக் கொள்வோம் சீக்கிரமா...

பாதகம் ஏதும் வந்திடமா உன் பெயரை காப்பாத்திடுவோம் பத்திரமா..




சாட்சி கொஞ்சம் சொல்லுறேன்

காட்சிப்படுத்தி பார்த்திடுங்க...




ஜல்லிக்கட்டுக்கு அறைகூவல் விட்டோமே

ஐயா உங்களுக்கு கேட்டுச்சா..




கலாம் மாணவர்கள் கரம் கோர்த்து அனுப்பின செயற்கை உம்மை சேர்த்திடுச்சா...




கனவை காணும் எங்களுக்கு சிறகு தந்த உமக்கு சாவேதும் இல்லையய்யா..

சரித்திரம் படைக்கும் மனதிலே உயிராய் நும் பெயர் அய்யா.




இவண்

உம்மை தாங்கி வாழ்பவர்களில் ஒருவன்

தாடி இல்லா கேடி கவிஞன்

பா.சுரேந்தர்

எழுதியவர் : தாடி இல்லா கேடி கவிஞன் (28-Jul-17, 2:08 pm)
பார்வை : 151

மேலே