ஆணும் நிலவும்
வானவெளியில் மிடுக்கு
நடையில் வலம் வருவாய்,
கணக்கில்லா கண்கள்
உன் தோற்றத்தை ரசித்திட,
வளர் பிறையாயினும்
தேய் பிறையாயினும்
மனம் தளராது ரம்யமாய் காட்சியளிப்பாய்,
எல்லாரையும் பெரிய கனவுகள்
காணத் தூண்டுவாய்,
எத்தனைக் கஷ்டங்கள் இருப்பினும்
உன் துணையால் மன அமைதி தருவாய்,
எண்ணற்ற நட்சத்திர கோபியர் நடுவே
செல்லக் கண்ணனாய் சுற்றி திருவாய் !