துடிக்கின்றது நெஞ்சம்

படித்திடும் ஆசையிலே பரிதவிக்கும் மழலைகள்
துடிக்கின்றது நெஞ்சமுமே துவள்கின்றது துயரத்தால் .
மடிக்கணினி காலத்தில் மங்கியதோர் அகல்விளக்கு .
எடுத்துரைக்கும் நிலையினிலே ஏழைகளோ ஈங்கில்லை .

அரசாங்கம் போடுதிங்கே ஆயிரமாய்த் திட்டங்கள்
உரமாக செல்வாக்கை உறவுக்காய் பங்கிடுவர்.
மரமாகிப் போனேனே மலராதோ வாழ்க்கையுமே .
கரந்தன்னைக் கொடுப்போரோ காசினியில் இல்லையினி !!

ஆக்கம் :- சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (3-Aug-17, 8:39 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 83

மேலே