சினிமாவைப்பத்தி ராமு-சோமு உரையாடல் -----சிந்திக்க, சிரிக்க

ராமு : என்னடா சோமு ஒருமாதிரியா யோசிச்சிட்டுகிட்டே
நடந்து வர ...............என்ன விஷயம் , சொல்லேன் நானும்
கொஞ்சம் தெரிஞ்சிக்கறேன்.

சோமு : ஐயா , இதை சொல்ல கூட எனக்கு கூசுதுங்க
பள்ளிக்குப்போற என் பேரன் டி .வீ போட்டு
லேட்டஸ்ட் தமிழ் சினிமா பாடல் வீடியோ
பார்த்துக்கிட்டிருதான், அப்படி என்னத்த தான்
பாத்திட்டு இருக்கானு பார்த்தேன் ................
என்னத்த சொல்லுவீரனுங்க .............
ஏதோ ஒரு புரியாத பாடல்,புரியாத மியூசிக் ல ஒரு
க்ரூப் டான்ஸ் ங்க ..............அதுல அரா,குறை ஆடை அணிந்து
பெண்கள் ஒரு பக்கம், முழுவதாய் டிரௌசர் ,சட்டை போட்ட
ஆண்கள் ஒரே ஆவேச ஆட்டம், அதில் ஆபாசமான அங்க
அசைவுகள் இருவரும் காட்ட ...............ஒருவரை ஒருவர்
நெருங்கி ஏதேதோ செய்கைகள் காட்டுதல்..........ஹீரோ
ஹீரோயினை கட்டிப்பிடித்து முத்தம் தருதல் என்று
. .........................
இப்படி இளம் நெஞ்சங்களை நம் பரம்பரியத்துக்கும்
கலாச்சாரத்துக்கும் ஒவ்வாத இது மாதிரி சினிமாக்கள்
நஞ்சுபோல் தாக்குவதை என் யாரும் கண்டு கொள்வதில்லையே

ஐயா, ஆண்கள் முழுவதாய் ஆடை அணிந்து நடனம்
பெண்களோ அரை குறை ஆடையில் ஆட்டம்,பாட்டம்
இது நாட்டை கெடுக்கும் தீய போதனைனு தோணிச்சுங்க
சினிமா பார்க்காத இளசுகள் நாட்டில் இல்லையே........

ராமு : நீ சொல்லுவது அத்தனையும் உண்மையே
சினிமாவில் சில நல்ல போதனைகளும் உண்டு ,இல்லை என்று
ஒட்டு மொத்தமா நான் ஒதுக்கல ஆனால் நீ சொல்றா மாதிரி
இப்பெல்லாம் சினிமா வேண்டாததை தான் அதிகமா
தாங்கி வருது.............நம் கலாச்சாரத்திற்கு ஒவ்வாத காதல்
காட்சிகள், ஆபாச பாடல் வரிகள்,சண்டை காட்சி ,தீய
யுக்திகள் .........................இப்படி அடுக்கி கொண்டே போகலாம்
இவற்றைப் பற்றி தெரிந்தும் தெரியாததுபோல் பெற்றோரும்
அரசாங்கமும் இருப்பது சரி என்று தோணலை
உன் ஆதங்கம் வாஸ்தவமானது சோமு ....................
யார் இதற்க்கு சரி பார்ப்பார் தெரியலையே ............


Close (X)

0 (0)
  

மேலே