ஒற்றை ஆணின் ஏக்கம்
ஒற்றை புறா ஒருபோதும் அழகில்லை
யார் அழகை கண்டும் ஒருபோதும் உரையவில்லை
சாயும் நேரம் சாலையோரம் காத்திருந்து
சாரலோடு சேர்ந்து காதல் இன்னும் தூரலையே
ஒற்றை நிலவு எப்போதும் அழகுதான்
நிலவோடு பேசி உரையாட முடியவில்லையே
தீராத தனிமை ஒருநாளும் கூடாதே
தனிமையை தொலைத்து யாரையும் தேடவில்லையே
நான் மட்டும் நடப்பதாலோ?
என் பாதை தேயவில்லையே
நான் மட்டும் நடந்து செல்ல
தனி பாதை தேவையில்லையே?
கண்ணோடு கண் பேச
காதலிய கேட்கவில்லையே
கண்ணீர் துடைக்க கரங்களை நான் ஏங்கினேன்.