அரளி விதையில் காதல் செடி

சாதி ஒழியவே காதல் வந்ததா
சேதி சொல்லவே கடிதம் வந்ததா
பார்வை தீண்டவே இரு மொட்கள் வெடித்ததா
பார்த்து ரசிக்கவே கரு விழிகள் பூத்ததா.

செய்தி அனுப்பவே செயலி வந்ததா
செல்ல மொழிகளை கேட்க வந்ததா
சின்ன பூக்களில் சிறு வாசம் மாறுதா
கண்ணில் விழுந்த நான் மீளவில்லையே.

தடயம் யாவுமே அழிந்து போகுதே
தயக்கம் இன்றியே முள்ளில் போகிறேன்
திரையில் வருவதே நீ மட்டும் தானடி
திரும்பி போகுதே என் தடயம் யாவுமே

எழுதியவர் : நா விஜய் பாரதி (22-Aug-17, 5:44 pm)
பார்வை : 144

மேலே