முகிலுக்குள் கலக்கும் தருணம் வேண்டி
நீராட்டிய ரோசாவொன்று
கூடையில் திரும்பி பார்த்தபடி
ஏக்கத்துடன் நிற்கின்றது
முகிலுக்குள் பிரவேசிக்கும்
தருணம் என்றேனும் வருமெனவேண்டி
இத்தினத்தின் பேற்றை
பெறப்போகின்றோமென கூத்துக்களித்தது
அச்செந்நிற ரோசா
உன் கால் தழுவிய கொலுசொலியின்
சங்கீதத்தை முணுமுணுத்தபடி
அவள் கரத்திடமிருந்து பூக்காரியிடம்
அதே ரோசாவுக்காக வெளிநின்ற
அவ்வொற்றை ரூபாய் சமிக்கையானது
ஏங்கிய அம்மலரின்
பேரின்ப வாழ்வின் தொடக்கம்