எனக்காக இருப்பாயா
எனக்காக இருப்பாயா கடைசி வரை என்னுயிரே
உனைசேர காத்திருப்பேன் கலங்கரையாய் என்னுயிரே
என் நெஞ்சே கலங்காதே மீண்டும் அவள் வந்திடுவாள்
ஓயாமல் கூவாதே ஆட்காட்டி பறவையை போல்
காதலியின் அழுகுரலும் கேட்கிறதா என் இமையே
காதல்வலி நெருப்பாக கொதிக்கிறதே என் இமையே
நீயில்லை என்றதுமே இறந்திருப்பேன் என் இமையே
உனக்காக உயிர்கொடுக்க காத்திருக்கேன் என் இமையே
வானவில்லும் குடைவிரித்து மேகத்தினை மறைத்திடுதோ
வண்ணங்களின் வாசனையை வரவேற்கும் மேகங்களோ
தீண்டாதே திரும்பாதே தீக்குளிப்பேன் உன்னை சேர
திமிராக தூரிகையால் கருப்பு வெள்ளை தீட்டிடுதோ
காதலை உனர வாய்ப்பே இல்லை
கண்ணியவள் மனம் அறிய வழியே இல்லை
கடலோசை என்றுமே ஓய்வதில்லை
காதலும் என்றும் அது தேய்வதே இல்லை.