காதலர்களின் கண்ணீர்

காதலர்களின் கண்ணீர் !
கவிதை by : கவிஞர் பூ.சுப்ரமணியன்

சாதி மதம் பணம்
என்று
காதலர்களிடம்
பிதற்றிக் கொண்டே
காதலுக்கு
சமாதி கட்டியவர்களே !

கடல் நீர்
உப்புக்கரிக்கிறதே
மனிதர்களே கேட்கிறீர்களா !

காதல் தோல்வியில்
காதலர்கள் வடித்த
கண்ணீர் எல்லாம்
கடலில் கலக்கும்போது ...
உப்புக் கரிக்காமல்
இனிக்கவா செய்யும் ?!

பூ. சுப்ரமணியன்,
பள்ளிக்கரணை, சென்னை

எழுதியவர் : பூ.சுப்ரமணியன் (2-Sep-17, 5:37 pm)
சேர்த்தது : பூ சுப்ரமணியன்
பார்வை : 131

மேலே