என்னை கவிஞனாக்கிய காதலியே

உன் நிழலோடு நிழலாக
நான் இங்கு வந்தேன்
என் பொன்மகள் ஒளிர்
முகம்காண ஓடோடி வந்தேன்

உன் மலர்பாதம் வழியில் நடக்கையில்
என் மனதில் பெரும் காயமாகும்
மாந்தளிர்மேனி மார்போடு சாய்கையில்
வந்த துன்பங்கள் யாவும் மாயமாகும்

வெயிலில் நீ நடக்கையில் வருகிற
வியர்வையும் உன்மேனியில் தேனாகும்
பக்கம் வராமல் விலகி சென்றால்
இளமை காலம் வீணாகும்

பாலைவன பாதையும் சோலையாகும்
பாவை நீ நடந்து செல்கையிலே
பட்டமரமும் துளிர்த்து எழும்
பேரழகி உந்தன் பார்வையாலே

மனதில் தோன்றிய கற்பனைகளை
காகிதத்தில் வடித்து வைத்தேன்
கன்னி உந்தன் அழகை
கவிதைகளில் எழுதி வைத்தேன்

எழுதியவர் : வேல்பாண்டியன் கோபால் (2-Sep-17, 11:37 pm)
சேர்த்தது : வேல்பாண்டியன்
பார்வை : 115

மேலே