தேவதை அழகு

ரசித்திடு ரசித்திடு மனமே
காணும் எல்லாம் அழகே
உயிருக்குள் ஊரும் உணர்வே
காதல் காமத்தின் நுழைவே


மனதின் ஆசைகள் எல்லாம்
ஆடைகள் இன்றி தவிக்கும்
காம கனவுகள் யாவும்
உள்ளே புதைந்து கிடக்கும்

உரசிட உரசிட மெதுவாய்
உணர்வுகள் மெல்ல வெடிக்கும்
வெடித்திடவெடித்திட தானே
தனிஉலகம் நமக்கென கிடைக்கும்


விடியல்கள் விரைந்திட
இரவுகள் தொடர்ந்திட
உன்னை முழுதும் படித்து
என்னை நானே தொலைக்க
மீண்டும் கிடைத்து
உன்னை ரசிக்க ...

உன் ஆதாரங்கள் சிகரங்கள்
சுளைகளாய் உதடுகள்
நிலவும் பிரதியோ என
சொல்லும் அழகுகள்

நீ சிணுங்கும் அழகினால்
உடைபடும் கவிதைகள்
சிதறி விட்டதோ
விண்மீனாய் வானிலே

எழுதியவர் : Rudhran (3-Sep-17, 12:49 am)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 189

மேலே