என் காதலின் கருவறை
பிறந்து சிறந்த பெண்களின் நடுவே...
சிறந்தெனக்காய் பிறந்தவளே...
எனக்குள்ளிருக்கும் என் இதயத்தை...
உன் காதலுக்கான கருவறையாய் மாற்றியவளே...!
இறக்கத்தான் பிறந்தேன்...
என்றுதான் நானிருந்தேன்...
சிறக்கத்தான் பிறந்திருக்கிறாய்,
என்றென்னிடம் உரைத்தவளே...
அசாத்தியங்களை கூட மிக எளிதாய்...
சாத்தியப்படுத்தும் உன் காதல்...
யாருமறியா கருவறையின் கதகதப்பை...
நானறிகிறேன் நித்தம்.. உன் காதலினால் மட்டும்...
உன்னை நேசிக்க... உயிராய் சுவாசிக்க...
உனக்காக ஓராயிரம் உறவுகளிருந்தாலும்...
நான் நேசிக்கவும்... என் உயிர் மூச்சாய் சுவாசிக்கவும்...
உன்னைத்தவிர எனக்கு வேறு யாருமே இல்லையடி...
என்றோ ஓர்நாள் பிரிவேனென்று...
என்னிடம் நீ சொல்லும்போதெல்லாம்,
இன்றே நான் போகவா என்று...
என்னிடம் என்னுயிர் கேட்கிறது...
இனியும் அப்படிக் கூறாதே...
என் காதல் என்றும் மாறாதே...
அதையும் மீறி
பிரிவதாய் இருந்தால்...
சொல்லாமலே போ...
என்னுயிரும்,
சொல்லாமலே போகும்...