அன்புள்ள அலைபேசியே

அன்புள்ள அலைபேசியே... என்னிடம்
திணறுகிற திறன்பேசியே...

என்னைவிட என் காதலை,
எவ்வளவு நீ உணர்ந்திருக்கிறாய்...
அதனாலோ என்னவோ,
அனேகமுறை அணைக்கப்பட்டிருக்கிறாய்...

என்னவளின் அழைப்பில்... நீ!
எத்தனை முறை கதறியிருப்பாய்...

அவளது கோபத்தால்... நீ!
அத்தனைமுறை சிதறியிருப்பாய்...

முத்தச்சத்தத்தில்...
மூச்சுத்திணற வைத்ததும் நீ... எங்கள் காதல்,
யுத்ததால் தினமும்,
செத்துத்செத்துப்பிழைப்பதும் நீ...

இதழ்கள் நான்கும்,
இதயங்கள் இரண்டும்,
எங்கெங்கோ இருந்தும்... நீ!
எங்களை சேர்த்துவைத்துள்ளாய்...

என் வலிகள் நீயறிவாய்...
என் கண்ணீரில் நனைந்தது நீ... என்
கண்மனியில் கண்ணீர் தெரிவாய்... அதை,
காட்சியாக கண்டதும் நீ...

காதலில் உருகும் காளையர்க்கும்,
காதலில் மருகும்
கன்னியர்க்கும்...
கருணை காட்ட,
கடவுளாயிரமுண்டு...
காதலை கண்முன் காட்ட...
கண்கண்ட தெய்வம் நீயேதான்...

கைப்பேசியை கண்ட பிரம்மன் வாழ்க...!

எழுதியவர் : மணிகண்டன் குடவாசல் (4-Sep-17, 10:47 pm)
சேர்த்தது : மணி வெண்பா
பார்வை : 924

மேலே