அன்பு

மானுடம் வளர்க்கும்
மந்திரச் சொல்,
ஊனுடம்பின்
உயிர் வித்தை!!!!!

விதை பிளந்த
முளை,
வேர் பிடித்த
மண்,

சுட்டிக்காட்ட முடியாத
சூட்சுமம்!!!
வரையறுக்க முடியா
பௌதிகம்!!!
பிரித்துரைக்க முடியா
வேதியம்!!!

ஆளுமை போற்றும்
ஆன்மிகம்!!!
வாழ்வியல் வளர்க்கும்
வர்த்தகம்!!!

யுத்த காலத்தில்
பூக்கள் தருவதில்லை
அன்பு!!!
ஜனன நேரத்து
மருத்துவச்சியின்
விரலிலும்!!!
சாகும் காலத்தில்
வெட்டியான்
தோளிலும்!!!!

வயது பார்ப்பதில்லை!!!
வருமானம் கேட்பதில்லை!!!
மதம், ஜாதி, மந்திரம்
பார்ப்பதில்லை,!!!!

அளவீடுகளிலும்
மதீப்பீடுகளிலும்
குறீயீடுகளிலும்
அகப்படாத
அதிசயம்!!!!

பலன் அறிதல்
வர்த்தகம்!!
திறன் அறிதல்
சாதனை!!!
உளம் புரிதலே
அன்பு!!!!!!!

எழுதியவர் : ஸ்ரீஜே (6-Sep-17, 4:44 pm)
Tanglish : anbu
பார்வை : 308

மேலே